செய்திகள்
பெண்களை பாதுகாக்கும்படி அரியானா, உ.பி. அரசுகளுக்கு மோடி அறிவுரை கூறவேண்டும்: காங்கிரஸ் கருத்து
பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றியபோது இந்திய பெண்களின் சக்தி குறித்து வெகுவாக புகழ்ந்தார். இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளது. #Congress #NarendraModi #MannKiBaat
புதுடெல்லி:
பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றியபோது இந்திய பெண்களின் சக்தி குறித்து வெகுவாக புகழ்ந்தார். இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி பேசும் முன்பாக உத்தரபிரதேசம்(உ.பி.), அரியானா மாநில பா.ஜனதா அரசுகள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த 2 மாநிலங்களிலும் அண்மையில் அதிக அளவில் கற்பழிப்பு, கொலை குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துள்ளன. எனவே இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி பெண்களை பாதுகாக்கும்படி இந்த அரசுகளுக்கு பிரதமர் அறிவுரை கூறவேண்டும்.
காங்கிரஸ்தான் முதல் பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதல்-மந்திரியை நாட்டுக்கு தந்தது. காங்கிரஸ் சாதி, மத பேதமின்றி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை கொள்கையாக கொண்டு உள்ளது. முதல் பெண் பிரதமரான இந்திரா காந்திதான் லட்சக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ சிப்பாய்களை சரணடைய வைத்தார். வங்காளதேசம் என்ற புதிய நாட்டையும் உருவாக்கினார். இதுதான் பெண்களின் சக்தி.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #NarendraModi #MannKiBaat