செய்திகள்

மும்பையில் இந்தியாவிலேயே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம்

Published On 2017-12-25 09:00 GMT   |   Update On 2017-12-25 09:00 GMT
மும்பையைச் சேர்ந்தவர் வீட்டில் வளர்த்த 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
புதுடெல்லி:

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பீர் மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முந்தைய நாட்களில் இம்மரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறித்தவர்களின் வீடுகளில் வைத்திருப்பதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த கிரேஸ் தால்கானா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை வளர்த்துள்ளார். 65 அடி உயரமுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம் இந்தியாவில் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் ஆகும்.


இந்த மரத்தை பார்க்க பல பகுதிகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் ஏராளமானோர் வருவதாக உரிமையாளர் கூறினார். அதை நினைக்கும் போது பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News