செய்திகள்

லக்னோ: சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2017-09-30 03:45 GMT   |   Update On 2017-09-30 03:45 GMT
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் தெருக்கள் மற்றும் சாலைகளை தூய்மையாக பராமரிக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங் கூறியதாவது:-

சாலைகளில் குப்பைகளை தேக்கி வைப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படும். கழிவுகளை பொது இடங்கள், நதி, கால்வாய் மற்றும் குளங்களில் கொட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

குப்பை தொட்டிகளை வைக்காத ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரமும், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களிடம் இருந்து ரூ.200-ம் அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த அபராத தொகையை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே வசூலிப்பார்கள்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரி உதயராஜ்சிங் கூறினார்.
Tags:    

Similar News