செய்திகள்

பலத்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் வழக்கறிஞர் பலி - ஒருவர் காயம்

Published On 2017-07-06 13:51 IST   |   Update On 2017-07-06 13:51:00 IST
லக்னோவில் பெய்து வரும் கன மழையால் மரம் முறிந்து விழுந்து வழக்கறிஞர் பலியானார். உடன் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், லக்னோவின் ஆஷியானா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க மிஷ்ரா என்ற வழக்கறிஞர் மற்றும் ராஜீவ் என்ற போலீஸ் அதிகாரியும் மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக மரம் முறிந்து அவர்கள் மேல் விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர், மிஷ்ரா ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மற்றும் ராஜீவ் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Similar News