செய்திகள்

அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்து: இரு வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு

Published On 2017-07-06 00:36 IST   |   Update On 2017-07-06 00:36:00 IST
அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 வீரர்களில் இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இட்டாநகர்:

அருணாச்சலப் பிரதேசத்தில் மாயாமான இந்திய விமானப்படை ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ் என்ன ஆனார்கள் என்ற தகவல் கிடைக்காமல் இருந்தது. 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், இரண்டு பேரின் உடல்கள் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அருணாசலப்பிரசேத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தன. எம்.ஐ-17 என்ற ஹெலிகாப்டர் நிவாரணப் பணிகளை முடித்துக் கொண்டு அசாமின் சோனிபூர் மாவட்டத்தில் உள்ள சலோனிபரி ஐ.ஏ.எப் விமான தளத்திற்கு திரும்பும் போது சுமார் 3.50 மணியளவில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நேற்று திடீரென மாயமானது.



ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்பட்ட அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசப் பகுதிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது. அதில் அந்த ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் யுபியா மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  

ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் ஒருவரது உடலும், நையார்ச் ஆற்றுப் பகுதிக்குள் மற்றொருவரது உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்ற இருவரது உடல்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.  

Similar News