செய்திகள்

கடும் பனிப்பொழிவு: காஷ்மீரில் ஜன. 29 வரை பல்கலைக்கழக வகுப்புகள் ரத்து

Published On 2017-01-17 22:09 IST   |   Update On 2017-01-17 22:09:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அம்மாநிலத்தில் காஷ்மீர் பல்கலைக்கழக வகுப்புகள் ஜனவரி 29-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க், ரஜோரி போன்ற பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளை போல், கடுமையான பனிப்பொழிவு கடந்த சில வாரங்களாக நிலவிவருகிறது. எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பி வந்த நிலையில், தற்பொது மீண்டும் புதிதாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அம்மாநிலத்தில் பல்கலைக்கழக வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18-ம் தேதி முதல்(நாளை) 29-ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 18 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவிருந்த காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Similar News