செய்திகள்

கடுமையான பனிப்பொழிவால் மூடப்பட்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இன்று திறப்பு

Published On 2017-01-09 14:42 IST   |   Update On 2017-01-09 14:42:00 IST
கடும் பனிப்பொழிவு காரணமாக மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வாகனப் பயன்பாட்டுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்;
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை முழுவதும் பனி மண்டிக் கிடப்பதால் கடந்த மூன்று நாட்களாக இந்த பாதையில் போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டு இருந்தது.

இதனால், காய்கறி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பனிப்பொழிவு சற்று குறைந்த காரணத்தால் இன்று ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை இருமார்க்க போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இதையடுத்து, இந்த சாலையில் மூன்று நாட்களாக முடங்கி கிடந்த வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

Similar News