செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வில் 52 சதவீத மதிப்பெண் பெற்றவர் இந்தியாவில் முதல் இடம்

Published On 2016-05-15 19:57 IST   |   Update On 2016-05-15 19:57:00 IST
சிவில் சர்வீசஸ் தேர்வில் 52 சதவீத மதிப்பெண் பெற்றவர் இந்தியாவில் முதல் இடம் பிடித்தது அனைவரையும் ஆச்சிரியப்படவைத்துள்ளது.
புதுடெல்லி:
 
மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பிரதான தேர்வு எழுதினர்.

சில நாட்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா முழுவதும் 1078 பேர் தேர்ச்சி பெற்றனர். டெல்லியைச் சேர்ந்த டினா டாபி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அத்தர் அமீர் உல் ஷபீர் கான் 2-வது இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களின் மதிப்பெண்களை தேர்வை நடத்திய யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் முதலிடம் பிடித்த டினா டாபி 52.49 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்கள்  2025-க்கு 1750 மதிப்பெண்களை பெற்றுள்ளார் டினா டாபி.

இரண்டாம் இடம் பிடித்த  ஜம்மு காஷ்மீரின் அத்தர் அமீர் உல் ஷபீர் கான் 50.27 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். வெறும் 52 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர் இந்திய அளவில் முதல் இடம் பிடித்தது தேர்வின் கடினத்தன்மையையும், தரத்தையும் காட்டுவதாக யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Similar News