செய்திகள்

மின்சாரம் தாக்கிய பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் தந்தை - மகன் பலி

Published On 2016-05-07 15:28 IST   |   Update On 2016-05-07 15:28:00 IST
தெலுங்கானா மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் தந்தை மற்றும் மகன் பலியாகியுள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பேரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர், லாவண்யா. இவர் துணிகளை காயப்போடுவதற்காக மின்சாரம் பாய்ந்துச்செல்லும் கம்பியை பயன்படுத்தியுள்ளார். அப்போது லாவண்யாவை
மின்சாரம் தாக்கியது.  

அவரது அலறல் சப்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் வசித்துவரும் யாதையா(60) மற்றும் அவரது மகன் ராஜு(22) ஆகியோர் ஓடிவந்து லாவண்யாவை காப்பாற்ற முயற்சித்தனர்.  

இதில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயங்களுடன் தப்பி, உயிர்பிழைத்த லாவண்யா விகாராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Similar News