செய்திகள்

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் - மக்களவையில் ஸ்மிருதி இரானி தகவல்

Published On 2016-04-25 19:28 IST   |   Update On 2016-04-25 19:28:00 IST
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ஐ.ஐ.டி.-களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்த இரானி தெரிவித்துள்ளார்.

கோபால்சாமி குழுவின் பரிந்துரைப்படி சமஸ்கிருத மொழியை மட்டும் அல்லாமல், அந்த மொழியில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக இரானி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

2000-ல் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐ.ஐ.டி. உட்பட 40 மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி வலியுறுத்தியது. இதனை அடுத்து பல பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

Similar News