செய்திகள்
மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம்கட்ட தேர்தல்: ஒருமணி நிலவரப்படி 52 சதவீதம் ஓட்டுப்பதிவு
மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு இன்று நடைபெற்றுவரும் நான்காம்கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் ஒருமணி நிலவரப்படி 52 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தா:
முதல்கட்ட வாக்குப்பதிவு இரு தினங்களில் நடந்தது. ஏப்ரல் 4-ந் தேதி 18 தொகுதிக்கும் (84.5 சதவீத வாக்குப்பதிவு) 11-ந் தேதி 31 தொகுதிக்கு (79.5 சதவீத வாக்குப்பதிவு) என 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இதையடுத்து, கடந்த 17-ந் தேதி நடைபெற்ற இரண்டாம்கட்ட தேர்தலில் 56 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 79.7 சதவீத ஓட்டு பதிவானது. மூன்றாம்கட்ட தேர்தலில் 62 தொகுதிகளுக்கு நடந்த வாக்குபதிவில் 79.22 சதவீதம் பதிவானது.
நான்காம்கட்ட தேர்தலாக இன்று 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் 40 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட தொகுதிகளில் சுமார் 1.08 கோடி வாக்காளர்கள் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் அமித்மித்ரா, பூர்ணேந்து பாசு, சந்திரிமா பட்டாச்சார்யா, பிரத்யாபாசு, ஜோதி பிரியோ, மல்பிக், அரூப்ராய் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அடங்கும்.
மூன்றாம்கட்ட தேர்தலின் போது முர்ஜீதாபாத் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் கொலை செய்யயப்பட்டார்.
இதனால் நான்காம்கட்ட தேர்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது. இதனால் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். பிற்பகல் ஒருமணி நிலவரப்படி மேற்கண்ட 49 தொகுதிகளிலும் 52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.