செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை

Published On 2016-04-25 08:02 IST   |   Update On 2016-04-25 08:01:00 IST
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே முழு அடைப்பு போராட்டத்தில் ஒரு பஸ்சுக்கு போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது
ஜாம்ஷெட்பூர் :

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேசிய பஞ்சாயத் ராஜ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று கலந்துகொண்டார். இந்த நிலையில் அம்மாநில அரசின் புதிய தற்காலிக உறைவிடக்கொள்கையை கண்டித்து எதிர்க்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அக்கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்களை போலீசார் முன்எச்சரிக்கையாக நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

ஜாம்ஷெட்பூர் அருகே ஒரு பஸ்சுக்கு போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. மேலும் பொட்டாக் என்ற இடத்தில் தண்ணீர் லாரி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் பல்வேறு இடங்களில் சாலையில் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர்.

Similar News