ராஜஸ்தானில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது: 2 பேர் உடல் கருகி பலி
- உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்துள்ளது.
- உயர் மின்னழுத்த வயரில் உரசி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்- டெல்லி நெடுஞ்சாலையில் மனோகர்புரா-ஷாபூர் அருகே உயர்அழுத்த மின்கம்பியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து உரசி தீப்பிடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஷாபூர்-மனோகர்புரில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களை உத்தர பிரதேச மாநலம் பிலிபிட்டில் இருந்து படுக்கை வசதி கொண்டு பேருந்து ஏற்றிக்கொண்டு வந்தது. மனோகர்பூரில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் உயர்மின்அழுத்தம் கொண்ட வயரில் உரசி பேருந்து தீப்பிடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் கிடையே அச்சம் ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறினர். மற்றவர்கள் தீயில் கருகி காயம் அடைந்தனர். சிலர் மின்வயரால் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.
காயம அடைந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி எஸ்எம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.
50 முதல் 60 தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது குடும்பம் மற்றும் லக்கேஜ் உடன் பேருந்தில் வந்துள்ளனர். சிலர் சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பஜன் லார் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.