இந்தியா

கர்நாடகாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 189 வழக்குகள் பதிவு- தேர்தல் ஆணையம்

Published On 2024-04-24 10:49 GMT   |   Update On 2024-04-24 10:49 GMT
  • முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
  • 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19-ந்தேதி தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்களூரு ஊரக மற்றும் மைசூர் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.

முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர் மற்றும் கோலார் ஆகிய 14 தொகுதிகளில் 2,88,19,342 வாக்காளர்கள் உள்ளனர். 1,44,28,099 பேர் ஆண்கள், 1,43,88,176 பேர் பெண்கள் மற்றும் 3,067 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

Tags:    

Similar News