இந்தியா
பீகாரில் கனமழையால் வெள்ளம்: 16 லட்சம் மக்கள் பாதிப்பு- மீட்புப்பணி தீவிரம்
- கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
- பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன.
பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடைவிடாத கனமழை காரணமாக போஜ்பூர், பாட்னா, பாகல்பூர், வைஷாலி, லகிசாரை, சரன், முங்கர், ககாரியா, பெகுசாரை மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதன்காரணமாக 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 32 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.