உள்ளூர் செய்திகள்

சாரைபாம்பு புகுந்த அங்கன்வாடி மையத்தினை படத்தில் காணலாம். 

பண்ருட்டி அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த சாரை பாம்பு

Published On 2022-08-24 08:15 GMT   |   Update On 2022-08-24 09:52 GMT
  • பூங்குணம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
  • குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் .

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம்ஊராட்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு20-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கே நேற்றுதிடீரென்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட குழந்தைகள் அலறிஅடித்து ஓடினர். குழந்தைகளின்புத்தகபை மீது பாம்பு புகுந்து ஓடியது. அங்கு இருந்தஅங்கன்வாடி மைய பொறுப்பாளர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அைழத்து சென்றார். குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அங்கன்வாடி மையத்தைஒட்டியுள்ளகுடியிருப்பில் மண்டி கிடக்கும் புதர்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News