செய்திகள்

எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி

Published On 2019-06-26 10:19 GMT   |   Update On 2019-06-26 10:19 GMT
டி.டி.வி.தினகரன் பண் பாடற்றவர். நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

மதுரை:

அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் அக்கட்சியில் டி.டி.வி.தினகரனுக்கு அடுத்த இடத்தில் செயல்பட்டவர். கடந்த சில நாட்களாக இவரது நடவடிக்கை டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையில் தங்க தமிழ்செல்வன் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த தினகரன் விரைவில் தங்கதமிழ்செல்வனை கட்சியை விட்டு நீக்குவேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை அழித்து அ.ம.மு.க. வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது. என்னை பற்றி ஆடியோ, வீடியோ அனுப்புவது டி.டி.வி. தினகரனின் தலைமை பண்புக்கு அழகல்ல. அவர் தலைமை என்ற பண்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்.


நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை. கொள்கை இல்லாத அ.ம.மு.க.வுக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன்?. அ.ம.மு.க.வில் இருந்து பாதிக்கும் மேற்பட்டோர் வெளிவந்து விட்டனர். தொடர்ந்து முழுமையாக வெளிவருவார்கள். இந்த கூடாரம் கலையுமா? என்பது தொண்டர்களின் கையில்தான் உள்ளது.

அனைத்திலும் தோல்வி பெற்றபின் அவற்றை மறுப்பது ஏன்?. ஊடகங்களையே தவறாக கூறும் தலைவர்தான் இப்போது இருக்கும் டி.டி.வி.தினகரன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News