சினிமா செய்திகள்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

Published On 2025-12-20 10:04 IST   |   Update On 2025-12-20 10:04:00 IST
  • 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
  • ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் இன்று மரணமடைந்தார்.

நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர். 

Tags:    

Similar News