செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும்- கே.எஸ் அழகிரி பேட்டி

Published On 2019-05-05 21:59 IST   |   Update On 2019-05-05 21:59:00 IST
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். இதனால் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது என்று தமிழக காங். தலைவர் அழகிரி கூறியுள்ளார். #ksalagiri #admk #localelection

கோவை:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தன் அரசியல் நிலைமையை மாற்றியுள்ளார். சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக ராகுல் காந்தியை பற்றி அவதூறு பேசி வருகிறார்.


புல்வாமா சம்பவத்தில் ராணுவ நடவடிக்கைகளை மோடி மாற்றி அமைத்ததே வீரர்கள் உயிர் பலிக்கு காரணம். தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாறு தெரியவில்லை. தானே புயல் பாதிப்புகளை உள்துறை மந்திரியாக இருந்த ப. சிதம்பரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து பா.ஜனதா சார்பில் ஒரு நிர்வாகி கூட வாயை திறக்கவில்லை.

நீட் தேர்வில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. பா.ஜனதா போல மாநிலங்களுக்கு எதிராக செயல்படாது. 3 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக போக்கு கிடையாது. மோடியுடன் சேர்ந்து எடப்பாடி அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும்.

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். இதனால் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது அந்தந்த மாநிலங்களில் தேர்வுகளை நடத்தி பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ksalagiri #admk #localelection

Similar News