செய்திகள்
திருத்தணி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.88 ஆயிரம் பறிமுதல்
திருத்தணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அளிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் திருவள்ளூர் வேளாண் விற்பனை மைய கண்காணிப்பாளர் பொன்னிவளவன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ. 88 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரபு என்பதும் இவர் ஏர்செல் வினியோகஸ்தர் என்றும் தெரிந்தது. அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூர் கருவூலகத்தில் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019