செய்திகள்

கொடநாடு விவகாரத்தை பிரசாரத்தில் பேசக்கூடாது- ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-03-29 09:42 GMT   |   Update On 2019-03-29 09:42 GMT
கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #KodanadIssue #MKStalin
சென்னை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.



இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், தமிழக அரசின் மனுவிற்கு ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். #KodanadIssue #MKStalin
Tags:    

Similar News