செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு - வைகோ பேட்டி

Published On 2019-03-26 14:22 IST   |   Update On 2019-03-26 14:22:00 IST
திமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் மதசார்பற்ற கூட்டணி பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெறும். பிரசாரத்தின்போது அதை உணர முடிகிறது. சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான சூழல்தான் நிலவுகிறது.

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்தோடு செயல்படுகிறதா என்பதற்கு, தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும். பிரசாரத்தின்போது கடந்த தேர்தலில் பார்த்ததைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார். #LokSabhaElections2019 #Vaiko

Tags:    

Similar News