உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
- பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் செங்கழுநீரோடை பகுதியில் தான் பணிபுரியும் அலுவலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரையும் கூட்டாளி ஒருவனையும் மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.