உள்ளூர் செய்திகள்

கல்லங்காட்டுவலசு பகுதியில் பெண்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

பெண்கள் படம் ஆபாசமாக சித்தரித்த வாலிபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-18 15:22 IST   |   Update On 2023-08-18 15:22:00 IST
  • பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன்
  • பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் முருகேசன் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளர் வக்கீல் கார்த்திகேயன், வி.மேட்டூரை சேர்ந்த முருகன், பழனிசாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டங்கள் வழிகாட்டி இருக்கும்போது, போலீசார் தவறு செய்தவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.

இந்த வழக்கை முழுமையாக விசாரித்து பெண்களை அவதூறாக சித்தரித்தவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News