உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் இளைஞர் திறன் தினவிழா நடந்தது.



அரசு பள்ளியில் இளைஞர் திறன் தினவிழா

Published On 2023-07-18 09:52 GMT   |   Update On 2023-07-18 09:52 GMT
  • பள்ளி மாணவன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான்.
  • சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொறியியல் பிரிவு சார்பில் உலக இளைஞர் திறன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழில் கல்வி பயிற்றுனர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் முகமது ரபிக் கலந்து கொண்டு பேசுகையில்:-

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி உலக இளைஞர் திறன் தினத்தை அறிவித்தது. இந்த நாள் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனை வருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" என்று பரிந்துரைக்கிறது.

ஐ.நா.வை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்கள் மற்றும் பெரியவர்க ளிடையே வளர்க்க உதவுவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

பின், பள்ளி மாணவன் தவச்செல்வன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான். மாணவன் லோகேஸ்வரன் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்து பேசினார். முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இதில் ஆசிரியை அஜிதா கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News