உள்ளூர் செய்திகள்
- எதிரே வந்த மற்றொறு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது
- விபத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், இளம்பட்டி அருகே உள்ள மைக்காமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அஜித் (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில், மத்தூர் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொறு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.