கோப்பு படம்.
வடமதுரை அருகே டாஸ்மாக் கடையில் பட்டாகத்தியுடன் மிரட்டிய வாலிபர் கைது
- பலத்த காயமடைந்தவரை திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார்.
- இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன்(35). இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை முனீஸ்வரன் பாறைப்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நின்றுகொண்டி ருந்தார்.
அப்போது அங்கு வந்த சொக்கன்(28) என்பவர் பட்டா கத்தியுடன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் முனீஸ்வரனை பட்டாகத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த முனீஸ்வரன் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து வடமதுரை போலீ சில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் பட்டாகத்தியுடன் சொக்கனை கைது செய்தனர். வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் 7 டாஸ்மாக் கடைகள் மற்றும் 3 சூதாட்ட கிளப்புகள் உள்ளன. இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. போலீசார் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற பிரச்சினைகளில்உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வரு கின்றனர்.
இதனால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகினறனர். எனவே சூதாட்ட கிளப்புகளை ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நடை பெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.