உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-23 15:59 IST   |   Update On 2023-08-23 15:59:00 IST
  • சிறிது நேரம் கழித்து வெங்கட்ராமன் வெளியே வந்து பார்த்தபோது, கடைக்கு முன்பு நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
  • உடனே திவாகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வைத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது28). இவர் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்தார்.

அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரம் கழித்து வெங்கட்ராமன் வெளியே வந்து பார்த்தபோது, கடைக்கு முன்பு நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த திவாகர் (30) என்பவர், வெங்கட்ராமனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

உடனே திவாகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News