உள்ளூர் செய்திகள்
- தனது வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டிருந்தார்.
- மர்ம நபர் ஒருவர் போனை திருட முன்றார்.
ஓசூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அலங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெகன் (31). இவர் ஓசூர் குமுதேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் போனை திருட முன்றார்.
இதை பார்த்த ஜெகன் அவரை பிடித்து அட்கோ போலீசில் ஒப்படைத்தார்.
பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது செயர் செங்கதிர் என்கிற சங்கர் (27), சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.