உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
- புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் போலீசார் தலக்காஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- போலீசார் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் போலீசார் தலக்காஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியை சேர்ந்த வேலு (19) என தெரியவந்தது.