உள்ளூர் செய்திகள்

பாளையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2023-04-29 12:11 IST   |   Update On 2023-04-29 12:11:00 IST
  • மாயாண்டி பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
  • ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லை:

பாளை மார்க்கெட் அருகே செந்தில்நகரை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி(25). இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று வழக்கம்போல் மாயாண்டி பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவில் உள்பக்க தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாயாண்டி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது ஷாலினி ஜன்னல் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடனே மாயாண்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

தகவல் அறிந்து அங்கு பாளை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷாலினியின் சொந்த ஊர் கன்னியாகுமரி. அங்குள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மாயாண்டி படித்தபோது அவருக்கும், அதன் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் பாளையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News