உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
கன்னிவாடி அருகே நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தற்கொலை
- 2 முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- செல்போனில் நண்பரிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் ஒருவரிடம் பேசிவிட்டு, தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.