உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி.
கொறுக்கையில் உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி
- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசப்பட்டது.
- நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துத் கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சி, பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி நிகழ்ச்சியை கொறுக்கையில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசப்பட்டது. அப்போது கழிவறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும், அனைவரும் அதை பயன்படுத்துவதுடன் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், கழிவறையை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தகூடாது, நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துத் கொண்டனர்,
பின்னர் விழிப்புணர்வு கோஷங்களுடன் பேரணி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் தமிழ் இலக்கியா, தலைமையாசிரியர்செல்வம், சுகாதாதார ஊக்குனர்கள் லதா, மல்லிகா,முன்னாள் வேலை திட்ட ஒருங்கிணை ப்பாளர் பிரபாகரன், அரசு பிற்பட்டோர் மாணவர் விடுதி ஆலோசனை குழு உறுப்பினர் வைரவ மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.