பத்மஸ்ரீ டாக்டர் சிவந்திஆதித்தனார் சிறப்புப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாமுவேல் சுந்தர்சிங் பரிசுகளை வழங்கிய போது எடுத்த படம்.
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்
- பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் ‘உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் 'உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவிற்கு பி.எஸ்.என்.எல். சாமுவேல் சுந்தர்சிங் தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் வரவேற்பு நடனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர் செல்வி மகேஸ்வரி, கவிதா, இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.