உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் பள்ளியில்உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2022-10-12 09:56 GMT   |   Update On 2022-10-12 09:56 GMT
  • தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
  • சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் வரவேற்றார். ரோட்டரி மண்டலம் 25-ன் உதவி ஆளுநர் சிவக்குமார் மற்றும் சங்கத்தின் மருத்துவ சேர்மேனும், திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவருமான பாபு தலைமை தாங்கினா.

சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News