டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி
- டாக்டர் லயனல்ராஜ் நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
- மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி வண்ணார்பேட்டையில் உள்ள மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இதில் மாநகராட்சி மருத்துவ அலுவலர் சரோஜா, இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை நிர்வாகிகள் சுப்பிரமணியன் , முகம்மது இப்ராகிம், பிரபுராஜ், அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் போது நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார். மனித சங்கிலி பேரணியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் விழித்திரை பிரிவு மருத்துவர்கள் நாசிக் ஹசன், பிருந்தா, குஷி அகர்வால் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி மாணவ மாணவிகள் , பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.