விபத்தில் பலியான தொழிலாளி.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
- அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா (வயது 56). கூலி தொழிலாளி.
இவர் தினமும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல், இன்றும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து புறப்பட்டு கடையில் டீ குடித்துள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தொழிலாளி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.