உள்ளூர் செய்திகள்

பலியான தொழிலாளி பின்ஹாச்சல் டோம்.

ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-09-29 15:45 IST   |   Update On 2023-09-29 15:45:00 IST
  • பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

பீகார் மாநிலம் ஹார்பூர் டோலா மாவட்டம் செம்ரகத் ஹார்பூர் பகுதியை சேர்ந்தவர் பின்ஹாச்சல் டோம் (வயது 48) தொழிலாளி. இவர் மதுரையில் தங்கி வேலை பார்ப்பதற்காக தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு அந்த ரயில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள மேலவழூத்தூர் பகுதியில் வந்த போது திடீரென பின்ஹாச்சல் டோம் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் உடனடியாக தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தலைமை காவலர் சரவண செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பின்ஹாச்சல் டோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News