உள்ளூர் செய்திகள்
ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
- சத்திரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்
- சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார்
சேலம்:
சேலம் பொன்னாம்மா–பேட்டை புது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் அஜித் (வயது 23).
வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சத்திரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.