உள்ளூர் செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
- கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
- தொழிலாளி கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த விடையூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் அன்பரசு மன வருத்தத்தில் இருந்தார்.
கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அன்பரசுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.