உள்ளூர் செய்திகள்

காந்திபுரத்தில் மொபட் திருடிய தொழிலாளி கைது

Published On 2022-12-26 14:49 IST   |   Update On 2022-12-26 14:49:00 IST
  • மொபட்டை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார்.
  • காட்டூரில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

கோவை,

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 40). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் மொபட்டை திருடி தப்பிச் செல்ல முயன்றார். இதனை பார்த்த திருமுருகன் வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர் அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜன் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே சிங்காநல்லூர், உக்கடம் , காட்டூரில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News