வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
- முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினர் பெற்றனர்.
தென்காசி:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் மடத்தூர் கைப்பந்து குழு சார்பாக பள்ளி நிர்வாகி கதிர்வேல் முருகன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளிகள் பிரிவில் முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினரும், 2-ம் பரிசை குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், மூன்றாம் பரிசை ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மேல்நிலைப்பள்ளி அணியினரும் பெற்றனர். கல்லூரிகள் பிரிவில் முதல் பரிசை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி அணியினரும், இரண்டாம் பரிசை குற்றாலம் பராசக்தி கல்லூரி அணியினரும், மூன்றாம் பரிசை சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி அணியினரும் பெற்றனர். ஏற்பாட்டினை சரவணசங்கர் மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.