உள்ளூர் செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள்-ஓவியங்கள்

Published On 2023-01-04 09:37 IST   |   Update On 2023-01-04 09:37:00 IST
  • பெண்களுக்கான ஆலோசனை வழங்க இந்த மையம் செயல்படுகிறது.
  • குழந்தை திருமணத்தை தவிர்ப்போம். பெண் குழந்தைகளை ஆரோக்கியத்திலும், ஆற்றலிலும் வளர்ப்போம்.

திருப்பூர் :

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது.பெண்களுக்கான ஆலோசனை வழங்க இந்த மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் சுவர்களில் கடந்த வாரம் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது. ஓவியங்கள், வாசகங்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-  கனவு, கல்வி, நலம் இதை விரும்புவதே குழந்தையின் மனம். குழந்தை திருமணத்தை தவிர்ப்போம். பெண் குழந்தைகளை ஆரோக்கியத்திலும், ஆற்றலிலும் வளர்ப்போம். பெண் குழந்தை திருமணத்தை தடுக்க, உடனே புகார் அளிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலர், போலீசார் உதவியை நாடலாம்.

பெண்களுக்கான உதவி எண் 1098. எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். பணியிடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க 2013ல் சட்டம் இயற்றப்பட்டது. உதவிக்கு ஒன் ஸ்டாப் சென்டரை 044 22233355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எந்த ஒரு நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைத்திருத்தல் வேண்டும். குழுவின் தலைவராக கலெக்டர் தொடர்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News