உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க காலிகுடங்களுடன் வந்த பெண்கள்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் திரண்ட பெண்கள்

Published On 2022-10-10 09:40 GMT   |   Update On 2022-10-10 09:40 GMT
  • எங்கள் பகுதிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என கூறியிருந்தனர்.
  • 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

நெல்லை:

நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்கு நேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து நெல்லை கலெக்டர் அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

சுத்தமான குடிநீர்

தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநி யோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும் உப்பு தண்ணீர் கலந்தும், புழுக்களுடன் விநி யோகிக்கபட்டு வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சுத்தமான குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்ட சலவை தொழிலாளர் சங்க செயலாளர் மகாராஜன் தலைமையில் கொடுத்த மனுவில், வீரவநல்லூர் பகுதியில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். 3 ஆண்டுகளாக நாங்கள் பட்டா கேட்டு வருகி றோம். கடந்த ஆண்டு அப்போதைய தாசில்தார் 22 பேருக்கு பட்டா வழங்க ஆணை வழங்கினார். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ரத்த பரிசோதனை மையம்

சமூக ஆர்வலர் செல்வ குமார் தலைமையில் தியாக ராஜ நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதி அருகே ரத்த பரிசோதனை மையம் அமைக்கபட்டுள்ளது.

இதனால் நோயாளி களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படு கிறது. முறையான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட வில்லை. எனவே முன்பு போல அவசர சிகிச்சை பிரிவு அருகே ரத்த பரிசோதனை பிரிவை வைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

குப்பக்குறிச்சி மேட்டூர் பகுதி பொதுமக்கள் புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 70 பேருக்கு இன்னும் பட்டா வழங்கப்பட வில்லை. இதற்கிடையே எங்கள் பகுதியில் தகுதியில்லா 164 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஓய்வூதியம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நேரத்தை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும். 100 நாள் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும். 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News