உள்ளூர் செய்திகள்

நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்களை வழங்கிய காட்சி.

சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்கள் வழங்கல்

Published On 2023-06-16 14:27 IST   |   Update On 2023-06-16 14:27:00 IST
  • மகளிர் மேன்மை சேமிப்பு திட்டம் மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
  • 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை அஞ்சலக அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை அஞ்சலக அதிகாரிகள் மகேஸ்வரன், கோமதிசங்கர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்களை வழங்கினார்.

இது குறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டமானது மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் 2 வருடங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதல் கணக்கு தொடங்கி 3 மாதம் ஆன பின்னர் தான் அடுத்த கணக்கு தொடங்க முடியும்.

இந்த சேமிப்பில் ஒரு வருடம் கழித்து 40 சதவீதம் பணத்தை எடுத்து கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்டு 6 மாத காலத்தில் கணக்கை முதிர்வு செய்தால் வட்டி குறைத்து 5.5 சதவிகிதம் வழங்கப்படும். கணக்கு வைத்து இருப்பவர்கள் இறந்தாலோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் இறந்தாலோ கணக்கு வைத்திருப்பவர்கள் நோய்வாய்ப் பட்டாலோ உரிய ஆவணங்களை கொடுத்து 7.5 சதவீத வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், மாரிசாமி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News