உள்ளூர் செய்திகள்
பெண்கள் தீச்சட்டி எடுத்து நடனமாடி வழிபாடு.
பெண்கள் தீச்சட்டி ஏந்தி வழிபாடு
- அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு.
- உலக நன்மைக்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வநாக முத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளியை ஒட்டி உலக ஷேமத்திற்கு அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுக்கும் பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் கோயிலின் பூஜகர் அம்மன் வேடமடைந்து தீச்சட்டி எடுத்து உலக ஷேமத்திற்காக நடனமாடி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார்.விழா மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.