உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு
- மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.
- விஜயா செயினை பிடித்துக்கொண்டதால் அது அறுந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா (50). கணவன்-மனைவி இருவரும் திருவள்ளூரில் உள்ள கடைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேரம்பாக்கம் - சத்தரை சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.
உடனே விஜயா செயினை பிடித்துக்கொண்டதால் அது அறுந்தது. கொள்ளையர் தங்களது கையில் சிக்கிய 2½ பவுன் செயினுடன் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.