சங்கராபுரம் அருகே பெண் அடித்து கொலை
- பால கிருஷ்ணன் (வயது 63). அமா வாசை (45). இவர் பால கிருஷ்ணனிடம் கடனாக ரூ.1½ லட்சம் வாங்கி இருந்தார். கடனை அவர் திருப்பிக் கொடுக்க வில்லை.
- இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப்பட்டை அடுத்த மங்களம் கிரா மத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 63). அதே பகுதி சேர்ந்தவர் ராமன் மனைவி அமா வாசை (45). இவர் பால கிருஷ்ணனிடம் கடனாக ரூ.1½ லட்சம் வாங்கி இருந்தார். பின்னர் அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்க வில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் பால கிருஷ்ணன் தரப்பிற்கும், அமாவாசை தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால கிருஷ்ணனும், மற்றும் பாலகிருஷ்ணன் மகன் மகேந்திரனும் (26) சேர்ந்து அமாவாசையை திட்டி தாக்கினர்.
மேலும் அவரது தலையை பிடித்து சுவற்றில் அடித்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அமாவாசை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், மகேந்திரன் ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமாவாசை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரி ழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி மகேந்தி ரனை போலீசார் கைது செய்தனர். மேலும் பால கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.