உள்ளூர் செய்திகள்

படுக்கை வசதியின்றி தரையில் தங்கியிருக்கும் நோயாளிகள்.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதி

Published On 2022-09-16 06:55 GMT   |   Update On 2022-09-16 06:55 GMT
  • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
  • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News