உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட பரமசிவன்.

சாத்தான்குளத்தில் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3.58 லட்சம் மதிப்பிலான வயர் திருடிய வாலிபர் கைது

Published On 2022-08-20 09:16 GMT   |   Update On 2022-08-20 09:16 GMT
  • சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
  • தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை 27-ந்தேதி அன்று நள்ளிரவு காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் கோர்கள் காணாமல் போனது.

இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் எட்வர்ட் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் காப்பர் வயர்களை திருடிய புதியம்புத்தூர் நீராவி பகுதியை சேர்ந்த முருகன் மகன் பரமசிவன் (வயது 30) என்பவர் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து லோடு வாகனத்தில் காப்பர் வயர்களை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் பரமசிவனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3.58 லட்சம் மதிப்பிலான 126 கிலோ காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News